அருணா கொலை வழக்கு-சாட்சிகள் விசாரணை முடிந்தது
நெல்லை: ஆலடி அருணா கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்தது. 19ம் தேதி வக்கீல்கள் வாதம் நடைபெறுகிறது. இதையடுத்து விரைவில் தீர்ப்பு கூறப்பட உள்ளது.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா மற்றும் அவரது நண்பர் ஆசிரியர் பொன்ராஜ் ஆகியோர் கடந்த 31-12-2004 அன்று ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டியில் வாக்கிங் சென்றபோது பைக்கில் வந்த சிலர் அவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.
இந்த வழக்கு முடிந்து இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்துள்ளது. இதையடுத்து வரும் 19ம் தேதி வக்கீல்கள் வாதம் நடக்கிறது. அதன் பின்னர் இம்மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலடி அருணா கொலை வழக்கில் விசாரணை முதலில் நெல்லை மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி கணேசன் முன்னிலையில் நடந்தது. முதல் 2 சாட்சிகளான பால்ராஜ், ஆத்தியப்பன் ஆகியோர் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பல்டியடித்து விட்டனர்.
4 சாட்சிகள் விசாரிக்கபட்ட நிலையில் இந்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று ஆலடி அருணா தரப்பு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள எஸ்.ஏ.ராஜா தரப்பு வழக்கறிஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கை விசாரிக்க ஐகோர்ட் தடை விதித்தது.
இதனால் இந்த வழக்கில் 6 மாதம் விசாரனை நடைபெறாமல் இருந்தது. இதற்கிடையே வழக்கில் திடீர் திருப்பமாக இதை விசாரித்து வந்த நீதிபதி கணேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி இவ்வழக்கு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு மீண்டும் விசாரணை துவங்கியது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications