ஓகனேக்கலில் எடியூரப்பா ஆர்ப்பாட்டம்
ஓகனேக்கல்: தர்மபுரி மாவட்டம் ஓகனேக்கலில் கர்நாடக அரசியல் கட்சிகள் மீண்டும் விஷமத்தைத் தொடங்கியுள்ளன. இன்று பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதனால் தமிழக, கர்நாடக எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா தலமான ஓகனேக்கலை தனக்கு சொந்தமானது என்று கர்நாடகம் சமீபகாலமாக பிரச்சினை கிளப்பி வருகிறது. குறிப்பாக கர்நாடகத்தைச் சேர்ந்த பல்வேறு கன்னட அமைப்புகள் கர்நாடக எல்லைக்குள் உள்ள ஓகனேக்கலின் மறு பகுதி வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயற்சிப்பது தினசரி செயலாகி விட்டது.
இந்த நிலையில் தற்போது இந்தப் பிரச்சினையை அரசியல் கட்சிகளும் தங்களது பிழைப்புப் பொருளாக எடுத்துக் கொண்டுள்ளன. காரணம், கர்நாடகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால் இதைப் பயன்படுத்திக் கொண்டு ஓட்டுக்களை அள்ள அவை திட்டமிட்டுள்ளன.
மேலும், சமீபத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்த கூட்டு குடிநீர்த் திட்டத்திற்கும் கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நேற்று தேவெ கெளடாவின் மதச்சார்பர்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான சோமசேகர் தலைமையில் அக்கட்சியினர் ஓகனேக்கல் வந்து 'சரச்சைக்குரிய' பகுதியைப் பார்வையிட்டு 'ஆய்வு' செய்தனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகலில் பாஜக மூத்த தலைவரும், பாஜகவின் முதல்வர் வேட்பாளருமான எடியூரப்பா வருகை தந்தார். அவருடன் ஏராளமான பாஜக தொண்டர்களும் வந்தனர்.
கர்நாடக எல்லையில் நின்றபடி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக நலனுக்கு எதிரான ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று அவர்கள் கோஷமிட்டனர். மேலும் ஓகனேக்கல் கர்நாடகத்திற்குச் சொந்தம் என்றும் கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எடியூரப்பா தலைமையில் கர்நாடக பாஜகவினர் நடத்திய இந்தப் போராட்டத்தையொட்டி, தமிழக எல்லைப் பகுதியில் மாவட்ட எஸ்.பி. நஜ்முல் ஹோடா தலைமையில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications