ஜெ. வழக்குகள்: இனி வக்கீல் நவநீதகிருஷ்ணன் கையில்?

அதிமுக ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த மூத்த வழக்கறிஞர் ஜோதி, ஜெயலலிதா-சசிகலா மீதான வழக்குகளில் ஆஜராகி வந்தார்.
இந் நிலையில் தினகரன்-சசிகலா புண்ணியத்தால் ஜோதிக்கு ஆப்பு வைக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வாய்ப்பு தரப்படவில்லை.
இதையடுத்து கட்சியைவிட்டு விலகிய கையோடு ஜெ-சசி மீதான ஊழல் உள்ளிட்ட பல வழக்குகளையும் அப்படியே விட்டுவிட்டு வந்தார் ஜோதி.
சசிகலாவின் பிடியில் கட்சியும் ஜெயலலிதாவும் இருப்பதால்தான் கட்சியை விட்டு விலகுவதாகக் காரணம் கூறிய ஜோதி, இனி ஜெயலலிதா சார்பாக வழக்குகளில் ஆஜராகப் போவதில்லை என்று கூறி வழக்கு கட்டுகளையும் போயஸ் கார்டனுக்கு அனுப்பினார்.
இந் நிலையில் அவரது இடத்தில் வக்கீல் நவநீதகிருஷ்ணனை நியமிக்க அதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
நவநீதகிருஷ்ணன் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
ஐகோர்ட் நீதிபதிக்கு இணையான அந்தஸ்தைப் பெற்றுள்ள இந்த பதவியில் உறுப்பினர்கள் 6 ஆண்டு காலம் அல்லது 62 வயது வரை நீடிக்க முடியும்.
ஆனால் நவநீதகிருஷ்ணனின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
இதனால் அவர், ஜோதியின் இடத்தை நிரப்பலாம் எனத் தெரிகிறது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications