துபாய்: விரைவில் குறைந்த கட்டண விமான சேவை
துபாய்: நடுத்தர வர்க்கத்தினரை ஈர்ப்பதற்காக குறைந்த கட்டண விமான சேவையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு விரைவில் தொடங்குகிறது.
துபாய் உள்பட ஐக்கிய அரபு எம்ரேட்ஸின் முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமானவர்கள் விமானங்கள்மூலம் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இதில் நடுத்தர வர்க்கத்தினர் கணிசமாக உள்ளனர். பெரும்பாலும் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் விமானங்களையே இவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
ஏர் இந்தியாவின் எக்ஸ்பிரஸ், ஷார்ஜாவின் பிரபல ஏர் அரேபியா ஆகிய விமான சேவைகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுவதால் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
குவைத்தில் இருந்து இயக்கப்படுகின்ற ஜஸீரா ஏர்லைன்ஸின் குறைந்த கட்டண சேவை அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்துக்குள் ஏகப்பட்ட டிமாண்டை பெற்றுள்ளது.
இந்த நிலையில், துபாயில் புதிய விமானப் போக்குவரத்து நிறுவனத்தை விரைவில் தொடங்குவதற்கு துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு எம்ரேட்ஸின் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அலி மக்தும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிறுவனத்தின் கீழ் குறைந்த கட்டண விமான சேவைகள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
யு.ஏ.இ.யின் முக்கிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் உடன் இணைந்து புதிய நிறுவனம் செயல்படும். இரு நிறுவனங்களுக்கும் பொதுவான தலைவர் நியமிக்கப்படுவார்.
பயணிகளிடம் குறைந்த கட்டண சேவைக்கான ஆதரவு பெருகி வரும்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications