ரகசியமாய் தமிழகம் வந்து சென்ற பிரியங்கா

வேலூர் தங்கக் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு உடனே அவர் டெல்லி திரும்பினார்.
வேலூர் அருகே அரியூரில் ஸ்ரீநாராயணி பீடம் சார்பில் கட்டப்பட்டுள்ள தங்கக் கோவில் உலகளவில் பிரபலமாகி வருகிறது. சமீபத்தில் இந்த கோவில் சார்பில் நடைபெற்ற விழாவில் முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்டார்.
இந் நிலையில் நேற்று காலை 10 மணியளவில் டெல்லியில் இருந்து வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை வந்திறங்கினார் பிரியங்கா.
அவருடன் இரு எஸ்.பி.ஜி. பிரிவு கமாண்டோக்கள் சாதாரண உடையில் வந்தனர். அவரது வருகை மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. தமிழக உளவுப் பிரிவினர் தவிர வேறு யாருக்கும் இந்தப் பயணம் குறித்த விவரம் தெரியாது.
சென்னையில் வந்திறங்கிய பிரியங்கா உளவுப் பிரிவினர் ஏற்பாடு செய்த சாதாரண காரில் வேலூர் கிளம்பினார். இந்தக் காருக்கும் முன்னும் பின்னுமாக இரு கார்களில் ஆயுதம் தாங்கிய உளவுப் படை போலீசார் சென்றனர்.
ஆனால், யாருக்கும் சந்தேகம் வராதபடி மிக சாதரண கார்களே பயன்படுத்தப்பட்டன.
வேலூர் செல்லும் வழியில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் நினைவிடத்தில் காரை நிறுத்தி இறங்கிய பிரியங்கா அங்கு தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு உடனே புறப்பட்டார்.
தலையில் துப்பட்டா போட்டிருந்த அவரை யாரும் அடையாளம் காணவில்லை.
பகல் 12.30 மணி அளவில் அவர் வேலூர் தங்கக் கோவிலுக்கு வந்த அவர் வரிசையில் நின்று தரிசனம் செய்தார். மகாலட்சுமி சன்னதி முன் மட்டும் சுமார் 10 நிமிடங்கள் அவர் தரிசனம் செய்தார்.
பின்னர் கோவிலை சுற்றிப் பார்த்துவிட்டுக் கிளம்பினார். கோவிலைச் சுற்றி மட்டும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு நின்றிருந்த போலீசாருக்கு வரப் போவது யார், வந்து சென்றது யார் என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு ரகசியம் காக்கப்பட்டது.
1.15 மணியளவில் அங்கிருந்து மீண்டும் காரில் புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்த பிரியங்கா மாலை 5.30 மணி விமானத்தில் டெல்லி திரும்பினார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications