உள்ளாட்சி தேர்தலில் கணக்கு காட்டாத 1700 பேருக்கு தடை
நெல்லை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு அது தொடர்பான கணக்கை தாக்கல் செய்யாத 1700 பேர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஓன்றிய அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 1700 பேர் தங்களது செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. தேர்தல் நடந்த தேதியில் இருந்து ஒரு மாதத்திற்குள் இந்த செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அதன் பின்னர் கணக்கை தாக்கல் செய்ய பல சந்தர்ப்பங்கள் வழங்கியும் அவர்கள் தாக்கல் செய்யவில்லை.
இதனால் இந்த 1700 பேரும் தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் இப்போது பதவியில் இருப்பவர் யாரும் இல்லை. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் விதிகள், சட்ட பிரிவுகளை அதிகாரிகள் படித்து புரிந்து கொண்டால் வழக்குகளை சந்திக்க வேண்டிய அவசியம் வராது. எனவே ஊராட்சி விதிகள், மாநகராட்சி, நகராட்சி சட்டம் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் தேர்தல்களில் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட முடியும் என்றார் அவர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications