ரூ. 60 லட்சம் ஹெராயின் பறிமுதல் - 3 பேர் கைது
சென்னை: சென்னையில், ரூ. 60 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் சிக்கியது. இதுதொடர்பாக இலங்கைத் தமிழர்கள் உள்பட 3 பேரை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
பிடிபட்ட மூன்று பேரிடமிருந்தும் 590 கிராம் ஹெராயின் பறிமுதல்
செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ. 60 லட்சம் ஆகும்.
மார்ச் 20ம் தேதி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கார் சிக்கியது. அதில் இருந்த இலங்கைத் தமிழரான ஜெயபாஸ்கரன் (53) மற்றும் கேரளாவைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரிடம் விசாரித்தபோது, அவர்களிடம் ஹெராயின் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில்,
மண்ணடி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு அதிகாரிகள் விரைந்தனர்.
அங்கு தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த முகம்மது மெஹரூப் என்கிற ராஜாவைக் (52) கைது செய்தனர்.
3 பேரும் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications