'போலி' டீத்தூளால் வாந்தி, பேதி- 10 பேர் பாதிப்பு
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே போலி டீத்தூளில் தயாரிக்கப்பட்ட டீ சாப்பிட்ட பத்து பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான டீக் கடைகளில் போலி டீத்தூள்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. கடைக்காரர்கள் தெரிந்தோ, தெரியாமலோ இவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.
போலி டீத்தூளை தயாரிக்கும் ஆலைகள் பெரிய அளவில் தொழிலை நடத்திக் கொண்டிருக்கின்றன. புளியங்கொட்டையிலிருந்துதான் இந்த போலி டீத்தூள் தயாரிக்கப்படுகிறது. மேலும் ஒரிஜினல் டீத்தூளின் நிறத்தைக் கொண்டு வருவதற்காக வேதிப் பொருட்களையும் அதில் கலந்து விஷத் தூளாக மாற்றி விடுகிறார்கள் போலி டீத்தூள் தயாரிப்பாளர்கள்.
இந்த போலி டீத்தூளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீயை சாப்பிடுவோருக்கு தலைவலி, தலைசுற்றல், வாந்தி, மயக்கம், வயிறு உபாதை போன்றவற்றுக்கு ஆளாகின்றனர்.
மன்னார்குடி அருகே அகோரம் கிராமத்தல் ஒரு டீ-க்கடையில் டீ குடித்த 10 பேருக்கு வாந்தி, பேதி, ஏற்பட்டுள்ளது. அவர்கள் சாப்பிட்ட டீ தூள் போலி டீத்தூள் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களை மன்னார்குடியில் உள்ளஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அதிகாரிகள் உரிய முறையில் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி இப்படிப்பட்ட போலி டீத்தூள் தயாரிப்பாளர்களையும் விற்பனையாளர்களையும் ஒடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications