மலையில் ஒரு மத நல்லிணக்கம்!
சென்னை: பங்குனி உத்திரம், மிலாடு நபி, புனித வெள்ளி ஆகிய மூன்று மத விழாக்களும் நேற்று நடந்ததால், சென்னை அருகில் உள்ள திரிசூலம் மலையில் மும்மதத்தினரும் திரண்டனர். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மூன்று மதத்தினரும் மிக இணக்கமாக தங்கள் வழிபாடுகளை நடத்திவிட்டுச் சென்றனர்.
இந்துக்களின் பங்குனி உத்திரம், இஸ்லாமியர்களின் மீலாது நபி மற்றும் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி ஆகிய மூன்று முக்கிய நிகழ்ச்சிகளும் நேற்று ஒரே நாளில் வந்தது.
இதனால் தமிழகம் முழுவதும் இந்த மூன்று மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் சென்னை அருகில் உள்ள திரிசூலம் மலையில் மூன்று மதத்தினரும் திரண்டனர்.
திரிசூலம் மலையில் ஒரு முருகன் கோவில் உள்ளது. பங்குனி உத்திரத்தையொட்டி இங்கு இந்துக்கள் திரண்டனர். அதே மலைப் பகுதியில் ஒரு தர்காவும் உள்ளது.
மேலும் சர்ச் ஒன்றும் உள்ளது.
இதன் காரணமாக மூன்று மதத்தினரும் இங்கு வழிபாட்டுக்காக கூடினர். ஆயிரக்கணக்கில் மூன்று மதத்தினரும் கூடியதால் பலத்த பாதுகாப்புக்கு போலீஸார் ஏற்பாடு செய்திருந்தனர். ஒவ்வொரு மதத்தினரும் குறிப்பிட்ட நேரத்தில் வழிபட ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் மூன்று மத நிகழ்ச்சிகளும் சுமூகமாக நடந்தன.
-
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications