பட்ஜெட்: 'மடிப்பிச்சை'-வைகோ; 'ஆகா ஓஹோ'-சிதம்பரம்
சென்னை: தமிழக பட்ஜெட் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத, மக்களை ஏமாற்றும் தந்திரமான பட்ஜெட் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக பட்ஜெட் வெறும் வார்த்தைகளின் வர்ணனைக் கோலம். மணம் தராத காகிதப் பூ மாலை. பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத, மக்களை ஏமாற்றும் தந்திரமான பட்ஜெட்.
அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கிட எந்த நடவடிக்கையும் இல்லை. விவசாயிகளின் துயரம் தணிக்க எந்த வழியும் செய்யப்படவில்லை.
பருப்பு, எண்ணெய் வகைகள் விலை உயர்வை அரசு கண்டுகொள்ளவில்லை. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டது ஒன்றும் சாதனை இல்லை.
தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க உரிய அணுகுமுறை இல்லை. தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பிரச்னைகளில் மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ளாததும், தமிழகத்தை வஞ்சித்து வருவதும் கண்டனத்திற்குரியது.
மத்திய அரசில் இடம் பெற்றுள்ள திமுக, ஒப்புக்கு சப்பாணியாக, இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கக் கூடாது என்று மடிப்பிச்சை ஏந்துவது வெட்கக் கேடானது.
அரசின் தோல்விக்கான ஒப்புதல் வாக்குமூலம் தான் இந்த பட்ஜெட் என்று கூறி்யுள்ளார் வைகோ.
ப.சிதம்பரம் பாராட்டு:
இந் நிலையில் இளையான்குடியில் ஆந்திரா வங்கி கிளையை திறந்து வைத்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,
மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசும் விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக அரசு வருவாய் பற்றாக்குறை இல்லாத உபரி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இது தமிழக வரலாற்றில் ஒரு திருப்பு முனை. எதிர்காலத்தில் தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை இருக்காது.
மற்ற மாநிலங்களும் தமிழக அரசை முன்னோடியாக கொண்டு உபரி பட்ஜெட் தயாரிக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications