அக்னி-1 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

ஒரிசா மாநிலம் பாலசோர் கடற் பகுதியில் உள்ள வீலர் தீவில் இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இன்று ஏவி பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை அக்னி-1 வகையைச் சேர்ந்ததாகவும். இன்று காலை 10.05 மணிக்கு, வீலர் தீவில், நடமாடும் லாஞ்சரிலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. குறிப்பிட்ட இலக்கை அக்னி சரியாக தாக்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு கட்டங்களைக் கொண்ட அக்னி, சிறிதளவு மாற்றம் செய்யப்பட்ட ஏஎஸ்எல்வியைக் கொண்டதாகும்.
1989ம் ஆண்டு மே 22ம் தேதி அக்னி ஏவுகணையின் முதல் பரிசோதனை நடத்தப்பட்டது. ஒரிசாவில் உள்ள சந்திப்பூரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
650 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய தன்மை படைத்தது அக்னி. அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய வல்லமையும் படைத்தது.
1989ம் ஆண்டைத் தொடர்ந்து 1999ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதியும், 2000மாவது ஆண்டு ஜனவரி 17ம் தேதியும் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
நீண்ட தூர அக்னி ஏவுகணையால் 1500 முதல் 2500 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்கக் கூடிய திறன் படைத்தது.












Click it and Unblock the Notifications