ஈஸ்டர்: கிறிஸ்தவ தேவாலயங்களில் உற்சாக கொண்டாட்டம்
சென்னை: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் மக்கள் நள்ளிரவு சிறப்பு வழிபாட்டை நடத்தினர்.
சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த ஏசு பிரான் மீண்டும் எழுந்தருளும் திருநாளாக ஈஸ்டர் ஞாயிறு பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இதில் கிறிஸ்தவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
சென்னையில் சாந்தோம், செயின்ட் தாமஸ் சர்ச், செயின்ட் மேரி சர்ச் மற்றும் பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்கள் மத்தியில் பைபிளில் உள்ள திருவாசகங்கள் ஓதப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) காலையில் அக்னி மற்றும் புனித நீரால் மக்கள் ஆசிர்வதிக்கப்பட்டனர்.
மாநிலம் முழுவதுமுள்ள பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களில் சமத்துவ வழிபாடுகள் நடத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications