திருச்சி, மதுரை-பெங்களூர் கூடுதல் ரயில் விட கோரிக்கை
திருச்சி: பெங்களூருக்கு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மதுரை மற்றும் திருச்சியில் இருந்து கூடுதலாக இன்னொரு ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த சேவை அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் சேகரன் இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துவிட்டது. ஆனாலும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு தூங்கும் வசதி கொண்ட மேலும் இரு ரயில்களை திருச்சி மற்றும் மதுரையிலிருந்து இயக்க வேண்டும்.
திருச்சியிலிருந்து பல ஆண்டுகளாக இயக்கப்பட்ட ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டித்துவிட்டதால் திருச்சி பயணிகள் பெரும் சிரமத்துள்ளாகி வருகின்றனர்.
அதே போல திருச்சி-அகமதாபாத் இடையிலான ரயிலை காரணமே சொல்லாமல் திடீரென ரத்து செய்துவிட்டனர். அதையும் மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications