சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா
சத்தியமங்கலம்: பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா இன்று நடந்தது.
பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.40 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். ஏராமான பெண்கள் கையில் குழந்தைகளுடன் தீ மிதித்தனர்.
இந்த கோவிலில் சிறப்பு விஷேசமாக கால்நடைகளும் குண்டம் இறங்கும். இந்த ஆண்டும் ஏராளமான ஆடு, மாடுகள் தீ மிதித்தன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்தனர். பெண்கள் மஞ்சள் உடை தரித்து கைகளில் தீச்சட்டி ஏந்தியும் வந்தனர்.
இந்த விழாவையொட்டி கோபி, ஈரோடு, தாராபுரம், காங்கயம், பவானி கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் பண்ணாரியம்மன் கோவிலுக்கு இயக்கப்பட்டன.
இந்த விழாவையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி சஞ்சய் அரோரா தலைமையில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படையினரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications