விண்வெளி வீரருக்கு பயிற்சி-ரஷ்ய உதவி நாடும் இந்தியா

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: சந்திரனுக்குச் செல்லும் சோயுஸ் விண்கலத்தில் இந்திய வீரர் ஒருவரை அனுப்ப இந்தியா விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (ஐஎஸ்ஆர்ஓ) மூத்த விஞ்ஞானி ஒருவர் பேட்டியளித்ததாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ''இந்திய வீரர் ஒருவருக்கு ரஷ்யாவில் பயிற்சி அளித்து அவரை சோயுஸ் விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்ப வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

ரஷ்ய ஒத்துழைப்போடு விண்வெளி பயிற்சி பெற்ற வீரரை வைத்து தனது எதிர்கால விண்வெளி பயணத் திட்டங்களை செயல்படுத்த ஐஎஸ்ஆர்ஓ திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக ரஷ்யாவின் பெடரல் ஸ்பேஸ் ஏஜென்சியுடன் ஐஎஸ்ஆர்ஓ நடத்திய பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைத்துள்ளது'' என்றும் அந்த விஞ்ஞானி குறிப்பிட்டதாக தெரிகிறது.

கடந்த 1984 ஏப்ரல் 2ம் தேதியன்று சோயுஸ் டி-11 என்ற ரஷ்ய விண்கலத்தில் முதன்முறையாக ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

24 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஓர் இந்திய வீரரை ரஷ்ய விண்கலத்தின் மூலம் அனுப்ப இந்தியா விரும்புகிறது.
இடைப்பட்ட காலத்தில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்திய பன்மடங்கு முன்னேறியுள்ளது.

சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் மூலம் ஏராளமான செயற்கைக் கோள்களை ஐஎஸ்ஆர்ஓ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது.

வரும் 2014ம் ஆண்டில் சந்திரனுக்கு முதன்முறையாக விண்வெளி ஓடத்தை அனுப்ப ஐஎஸ்ஆர்ஓ திட்டமிட்டுள்ளது. திரவ, திட மற்றும் கிரையோஜீனிக் எரிபொருள் அடங்கிய மூன்றடு்க்கு ஜிஎஸ்எல்வி-Mk II ரக ராக்கெட் மூலம் இந்த ஓடம் செலுத்தப்படும்.

2 ஆயிரத்து 200 கிலோ எடையை பூமி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் திறன் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+