அல்-உம்மாவினர் வெடிகுண்டு கடத்திய வழக்கில் ஏப்ரல் 9ல் தீர்ப்பு
கோவில்பட்டி: அல்-உம்மா இயக்கத்தை சேர்ந்தவர்கள் வெடிகுண்டுகள் கடத்திய வழக்கில் ஏப்ரல் 9ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று கோவில்பட்டி சப்-கோர்ட் நீதிபதி அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மதுசூதனன். கார் டிரைவர். 1992ம் ஆண்டு இவரது காரில் அல்உம்மா இயக்கத்தை சேர்ந்த இமாம் அலி, ஹைதர் அலி, அப்துல் முத்தலிப், அப்துல்காதர், ஜாகீர்உசேன் ஆகிய 5 பேர் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தனர். தூத்துக்குடி நோக்கி சென்றபோது டிரைவர் மதுசூதனனை தாக்கி கயிற்றால் கட்டி போட்டு விட்டு காரை கடத்திச் சென்றனர்.
அப்போது கோவில்பட்டி அம்பேத்கார் சிலை அருகே கார் விபத்துள்ளானது. காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர். விபத்துக்குள்ளான காரில் இருந்து ஏராளமான வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை கோவில்பட்டி கிழக்கு போலீசார் கைப்பற்றினர்.
இது குறித்த வழக்கு கோவில்பட்டி சப்-கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் முக்கிய குற்றவாளி இமாம் அலி பெங்களுரில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தார். ஹைதர் அலி உள்ளிட்ட மற்றவர்கள் கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜாராகி வருகின்றனர். இந்த வழக்கில் நேற்றுடன் சாட்சி விசாரணை முடிவடைந்தது.
வழக்கை ஏப்ரல் 9ம் தேதிக்கு ஓத்தி வைத்த நீதிபதி மஞ்சுளா அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். கடந்த 16 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு முடிவுறும் நிலைக்கு வந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications