தஞ்சையில் மெகா வளைகாப்புவிழா-300 கர்ப்பிணிகள் பங்கேற்பு
தஞ்சாவூர்: தஞ்சையில் 300 கர்ப்பிணிகள் பங்கேற்ற பிரம்மாண்ட வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பொது மக்களும் ஏராளமாக கலந்துக் கொண்டனர்.
தஞ்சை அருகே அன்னப்பன்பேட்டை மற்றும் கொத்தங்குடி ஊராட்சிகளும் மெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து அப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டன.
மெலட்டூர் ஆரம்ப சுகாரதார நிலையத்துக்குட்பட்ட 25 கிராமங்களை சேர்ந்த 300 கர்ப்பிணிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை அதிகாரிகள் முறைப்படி அழைத்து வந்தனர்.
தாய் வீட்டு சீதனம் உள்பட எல்லா விதமான சடங்குகளும் நடத்தப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு முதலில் வண்ண வண்ண வளையல்கள் அணிவிக்கப்பட்டது. விழாவுக்கு வந்தவர்கள் கர்ப்பிணிகளுக்கு சந்தனம் பூசி ஆரத்தி எடுத்தனர்.
வளைகாப்பு உணவு சீரில் சாம்பார் சாதம், தயிர் சாதம், புளி சாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம், என 7 வகை சாதங்கள் கர்ப்பிணிகளுக்கு பரிமாறப்பட்டது. தங்களுக்கு இது வித்தியாசமான அனுபவத்தையும், மகிழ்ச்சியும் தருவதாக கர்ப்பிணிகள் உற்சாகமாக கூறினர்.
முன்னதாக கர்ப்பிணிகளின் பேரணி நடந்தது. நிகழ்ச்சியில் கருத்தரிப்பது முதல் பிரசவம் வரை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் விளக்கம் அளித்தனர். இந்த மெகா வளைகாப்பில் ஏராளமான பொது மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications