தா.கி கொலை வழக்கு சாட்சியை மிரட்டுகிறார் அழகிரி - ஜெ. புகார்

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தா.கிருட்டிணன் கொலை வழக்கில் தனது மகனைக் காப்பாற்ற, எப்படியாவது தப்பிக்க வைக்க வேண்டும் என்பதில் முதல்வர் கருணாநிதி குறியாக இருக்கிறார்.
தா.கி. கொலை வழக்கை மதுரை நீதிமன்றம் விசாரித்தால், முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் தப்பிக்கலாம், அவரது தந்தை முதல்வராக இருப்பதால் இந்த வழக்கை மதுரையில் விசாரிக்கக் கூடாது என்று கூறி சித்தூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.
இந்த வழக்கில் திருமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் அரசுத் தரப்பில் முக்கிய சாட்சியாக உள்ளார். அவர் ஏப்ரல் 1ம் தேதி சித்தூர் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவுள்ளார்.
ஆனால் அழகிரிக்கு எதிராக சாட்சி சொல்லக் கூடாது என்பதற்காக அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி அவரை அழகிரி மிரட்டுகிறார். மதுரை அவனியாபுரம் வாசுகி தெருவில் வசிக்கும் கணேசன் என்பவர் கடந்த 22ம் தேதி கத்தியால் குத்தப்பட்ட வழக்கில், முத்துராமலிங்கத்தின் மகன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் இருக்கும்போது, மரபை மீறி டிஎஸ்பி ஒருவர் முத்துராமலிங்கத்தின் வீட்டுக்குச் சென்று அவரது மகனை ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளனர். இல்லாவிட்டால் உங்களைக் கைது செய்வோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து மனித உரிமைக் கழகம், டிஜிபி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு எதிராக முத்துராமலிங்கம் சாட்சி சொல்லக் கூடாது என்பதற்காக அவரை அழகிரி மிரட்டுகிறார். இதற்கு முதல்வர் கருணாநிதியும் உடந்தையாக இருக்கிறார்.
இந்தக் கூட்டுச் சதியால், முத்துராமலிங்கத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெரும் ஆபத்து நேரிட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
முத்துராமலிங்கத்திற்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் அதற்கு முதல்வர் கருணாநிதிதான் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்ந்தால், அதை சட்டரீதியாக, உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல அதிமுக தயங்காது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications