துர்கை உருவத்தில் போஸ்டர்-சோனியா மீது வழக்கு
முசாபர்பூர்: துர்கை உருவத்தில் சோனியாவை சித்தரித்து போஸ்டர் வெளியிடப்பட்டது தொடர்பாக, இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டதாக சோனியா காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதிர் ஓஜா என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், உ.பி. மாநிலம் மொராதாபாத் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூன் 21-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை துர்கை உருவத்தில் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அந்தப்படம், அப்போதே தொலைக்காட்சிகளில் படம் பிடித்து ஒளிபரப்பப்பட்டது. பத்திரிகைகளும் வெளியிட்டன.
அந்த போஸ்டரை மொராதாபாத் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும் இணைந்து தயாரித்துள்ளனர். அவர்களுடன் இணைந்து சோனியா காந்தியும் குற்றச்சதியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த போஸ்டரால் இந்துக்களின் மனம் புண்பட்டுள்ளது. எனவே சோனியா உள்ளிட்ட மூவர் மீதும் ஐபிசி 295, 295(ஏ),120(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு, மாவட்ட நீதிபதி எச்.கே.ஸ்ரீவஸ்தவா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற அவர் விரைவு நீதிமன்றத்திற்கு அதை அனுபப்ினார். அடுத்த மாதம் இந்த மனு அங்கு விசாரணைக்கு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications