சிறையில் சித்திரவதை-கைதி கணேசனை வேறு சிறைக்கு மாற்ற உத்தரவு

வேலூர் சிறையில் கற்பழிப்பு வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வரும் கைதி கணேசன் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில் தனது மனைவி நதியாவை, சிறை துணை ஜெயிலரும், வார்டன்களும் சேர்ந்து கற்பழித்து விட்டதாக கூறியிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் நதியாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது.
நதியாவை திருப்பூரில் மீட்ட போலீஸார் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு புதிய திருப்பமாக, அவருக்கு கல்யாணமே ஆகவில்லை என்று நதியாவின் தாயார் தெரிவித்தார். மேலும், நதியா கன்னித்தன்மை கழியாதவர் என்று போலீஸார் அறிக்கைதாக்கல் செய்தனர்.
இதையடுத்து கணேசனின் வக்கீல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் இந்த வழக்கை பைசல் செய்தது.
இந்த நிலையில் இன்னும் ஒரு திருப்பமாக, நதியா, கணேசனுக்கு எழுதி காதல் ரசம் சொட்டும் கடிதங்களும், இருவரும் கல்யாண கோலத்தில் இருக்கும் படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து உண்மை கண்டறியும் குழு ஒன்று விசாரணையில் இறங்கியது. இந்தக் குழுவைச் சேர்ந்த வக்கீல்கள், கணேசனை சிறையில் சந்திக்க முயன்றபோது அனுமதி கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து கணேசனின் வழக்கறிஞர் அய்யப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார். அதில் சிறையில் தனிமைச் சிறையில் கணேசன் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு உணவு சரிவர தரப்படுவதில்லை. சித்திரவதைக்கும் ஆட்படுத்தப்படுகிறார் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வேலூர் மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டது. மாவட்ட நீதிபதியும் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தினார். அதன் பின்னர் இன்று அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் கணேசன் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும், சித்திரவதை செய்யப்படுவதும் உண்மைதான் என்று தெரிவித்திருந்தார்.
இன்று அய்யப்பன் தாக்கல் செய்த மனு மீண்டும் நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேலூர் மாவட்ட நீதிபதியின் அறிக்கையைப் பரிசீலித்த நீதிபதிகள், கணேசனை உடனடியாக வேறு சிறைக்கு மாற்ற உத்தரவிட்டனர். அவருக்கு தரமான உணவு, தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
கைதி கணேசனை அவரது வழக்கறிஞர் அய்யப்பன் நேரில் பார்க்க சிறை நிர்வாகம் அனுமதி தர வேண்டும் எனவும் தங்களது உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
மேலும், கணேசன் சித்திரவதை செய்யப்பட்டது குறித்து வேலூர் மாவட்ட எஸ்.பி, வேலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த கட்டண விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கணேசன் சித்திரவதை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் கணேசன், நதியா விவகாரம் வெடித்துக் கிளம்பும் எனத் தெரிகிறது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications