மே 28ம் தேதிக்குள் கர்நாடகத்தில் தேர்தல்!
சென்னை: கர்நாடக மாநில சட்டசபைக்கு மே 28ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை வந்த கோபாலசாமி, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா உள்ளிட்ட அதிகாரிகளுடன், தொகுதி மறு சீரமைப்பின் அடிப்படையில் அமைந்துள்ள புதிய தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கோபாலசாமி பேசுகையில், புதிய தொகுதிகளின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஜூலை 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் திருத்தங்கள், நீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் உள்பட இனிமேல் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களும் புதிய தொகுதிகளின் அடிப்படையில்தான் நடைபெறும்.
இருப்பினும் இடைத் தேர்தல்கள் தற்போதுள்ள தொகுதிகளின் அடிப்படையில் நடத்தப்படும்.
கர்நாடகத்தில் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. தேர்தல் பாதுகாப்புக்குத் தேவைப்படும் போலீஸாரின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. எத்தனை வாக்குச் சாவடிகள் தேவை என்றும் ஆலோசித்து வருகிறோம்.
இந்தப் பணிகள் முடிந்தவுடன் தேர்தல் தேதியை அறிவிப்போம். அனேகமாக ஓரிரு நாட்களில் தேதி அறிவிக்கப்படலாம். மே 28ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டு விடும் என்றார் கோபாலசாமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications