டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வடக்கு டெல்லியில், நேற்று கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியானார்கள்.
வடக்கு டெல்லியில் உள்ள பிரம்மபுரியில் இந்த விபத்து நடந்தது. அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடம் நேற்று திடீரென சரிந்து விழுந்தது. இதில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட 7 கட்டடத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஷீலா தீக்சித் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். மேலும் நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications