ரணில் ஆட்சியைக் கலைத்தது பெரும் தவறு-சந்திரிகா
கொழும்பு: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஆட்சியை கலைத்தது நான் செய்த பெரும் தவறு என்று இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதவிர மேலும் 2 பெரிய தவறுகளையும் தான் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
சந்திரிகா குமாரதுங்கா 9 ஆண்டுகள் அந்நாட்டின் அதிபராக இருந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் அரசியல் வாழ்க்கையில் தான் செய்த 3 குற்றங்கள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அவற்றை பட்டியலிட்டும் கூறியுள்ளார்.
புலிகளுடன் அமைதி பேச்சு வார்த்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஆட்சியை 2004ம் ஆண்டு கலைத்தது தான் செய்த முதல் பெருங்குற்றம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்து சிங்கள தீவிரவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவுடன் தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி வைத்ததும் தவறு என்று கூறியுள்ளார். 3வதாக தான் செய்த தவறை தற்போது கூற முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும், காலம் வரும்போது அதையும் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இனப்பிரச்னையில் இருதரப்பிலும் பலி அதிகமாகி வருகிறது. இதற்கு தீர்வுகாண ஆளும் ஸ்ரீலங்கா தேசிய கட்சியும், எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து பாடுபட வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எனது தந்தை உருவாக்கியதால் அதன் மீது எனக்கு பாசம் அதிகம் உண்டு. ஆனால் எதிர்காலத்தில் நானோ, எனது சகோதரி சுமித்ராவோ தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை.
தற்போதைய அரசின் சில கொள்கைகள் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு ராணுவ ஆட்சிக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications