குடிநீரில் மாசு: காலராவுக்கு ஒருவர் பலி-200 பேருக்கு வாந்தி, பேதி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மாசு கலந்த கலப்பட குடிநீரை குடித்ததால் காலரா ஏற்பட்டு ஒருவர் பலியானார். 200 பேர் வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்பத்தூர் மலர்குளத்தில் போர்வெல் போடப்பட்டு அதன் முலம் புதியம்புத்தூர், நடுவங்குறி்ச்சி, சாமிநத்தம், ராஜாவின் கோவில் உள்ளிட்ட பல ஊர்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக போர்வெல் தண்ணீருடன் மாசு கலந்த குளத்து நீரும் சேர்ந்து சப்ளையானதால் பொதுமக்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் உள்பட 200 பேர் பாதிக்கப்பட்டு புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி அரசு மருத்துவமனைகல் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி புதியம்புத்தூர் கீழத்தெருவை சேர்ந்த அழகர்சாமி இறந்தார்.
மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தி்த்து தமிழக கால்நடை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல் கூறினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications