'கோமா'வில் களக்காடு அரசு மருத்துவமனை!
களக்காடு: களக்காடு அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளே இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
களக்காடு-நாங்குநேரி ரோட்டில் பெல்ஜியம் என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவமனை கடந்த 1968ல் தொடங்கப்பட்டது. இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர் பிரிடா மோனியர் இந்த மருத்துவமனையை தொடங்கி அரசிடம் ஓப்படைத்தார்.
களக்காடு சுற்று வட்டராத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நோய்களை தீர்ப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை தற்போது எந்த வசதியுமின்றி கோமா நிலையில் உள்ளது.
நெல்லை மருத்துவ கல்லுரி டீனின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மருத்துவமனையில் ஒரு முதுநிலை டாக்டர், ஒரு இளநிலை டாக்டர், 6 செவிலியர்கள், 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
எனினும் உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.
சிகிச்சை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகின்றனர். கடந்த 11ம் தேதி சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருந்த பிரபல ரவடி தங்கராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
30 படுக்கை வசதிகள் இருந்தும் உள் நோயாளிகள் அதிக அளவில் அனுமதிக்கப்படுவதில்லை. நாய்க்கடி மற்றும் விஷக்கடி மருந்துகள் இல்லாததால் நெல்லை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.
விபத்து மற்றும் குற்ற நடவடிக்கைகளினால் ஏற்படும் காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்கப்படுவதில்லை. இதனால் நெல்லைக்கு கொண்டு செல்வதால் சிலர் வழியிலேயே உயிரிழக்கின்றனர்.
எனவே கோமா நிலைக்கு சென்று விட்ட இந்த மருத்துவமனையை உரிய முதலுதவி செய்து காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம்












Click it and Unblock the Notifications