எஸ்.வி.சேகர் தொடங்கும் 2 டிவி சேனல்கள்
சென்னை: 2 புதிய சாட்டிலைட் டிவி சானல்களை விரைவில் தொடங்கப்போவதாக காமெடி நடிகரும், அதிமுக எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் தங்கெளுக்கென ஒரு டிவி சானலை வைத்துள்ளன. அதிமுகவுக்கு 'ஜெயா', திமுகவுக்கு முன்பு 'சன்', இப்போது 'கலைஞர்', பாமகவுக்கு 'மக்கள்', காங்கிரசுக்கு முன்னாள் அமைச்சர் தங்கபாலுவின் 'மெகா' மற்றும் எம்எல்ஏ வசந்தகுமாரின் 'வசந்த்' ஆகிய டிவிகள் உள்ளன. இதுதவிர ராஜ் டிவி, தமிழன் டிவி, விண் டிவி போன்ற தமிழ் சானல்களும் உள்ளன.
போதாக்குறைக்கு தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் தங்களுக்கென பத்திரிகையும், சாட்டிலைட் சானல் டிவியையும் புதிதாகத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இந் நிலையில் நடிகர் எஸ்.வி.சேகரும் இந்த களத்தில் குதித்துள்ளார். அதிமுக சார்பில் மைலாப்பூர் தொகுதியி்ல் போட்டியிட்டு எம்எல்ஏவாக உள்ள சேகர் 2 புதிய டிவி சானல்களைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
ரூ. 10 கோடி முதலீட்டில் 'எஸ்வி டிவி', 'இந்தியா டிவி' ஆகிய 2 சானல்களை வரும் 9 மாதங்களுக்குள் தொடங்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் தலைமை அலுவலகம் சென்னையில் அமைக்கப்படுகிறது.
முழுக்க காமெடி நிகழ்ச்சிகளை மட்டுமே எஸ்வி டிவியில் ஒளிபரப்பப்போவதாக சேகர் கூறினார். இந்திய டிவியில் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே அல்லாமல் நாடகங்கள், விவாத மேடைகள் போன்ற பிற நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவதாக தெரிவித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications