பணிக்கு 'லேட்': டாக்டர், ஊழியர்கள் சிறைபிடிப்பு-நோயாளிகள் ஆவேசம்
களியாக்கவிளை: தினமும் பணிக்கு தாமதமாக வந்த அரசு டாக்டர் மற்றும் ஊழியர்களை நோயாளிகள் நேற்று சிறை வைத்தனர்.
குமரி மாவட்ட பனச்சமூடு அருகே வெள்ளநடை பகுதி உள்ளது. இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தான், சுற்றுவட்டார மலையோர கிராம மக்கள் நம்பியுள்ளனர். தினமும் சுமார் நூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு வருகின்றனர்.
இந்த ஆரம்ப சுகாதர நிலையத்தில் பணியாற்றும் டாக்டர்கள், மற்ற ஊழியர்கள் அனைவரும் தினசரி காலதாமதமாகவே பணிக்கு வருகின்றனர்.
இதனால் காலையிலேயே சிகிச்சைக்காக வந்து நிற்கும் நோயாளிகள் பசியுடன் டாக்டர்களுக்காக மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கும் நிலை உள்ளது.
பல மாதங்களாக இதேநிலை நீடிப்பதால் மக்கள் வெறுத்துப்போய் இருந்தனர். இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு மேல் டாக்டர்களும் ஊழியர்களும் பணி்க்கு வந்துள்ளனர். அதுவரை காத்திருந்த ஆத்திரத்தில், டாக்டர்கள் மற்றும் ஊழியர்களை சுகாதார மையத்துக்குள் அடைத்து வைத்து மருத்துவமனையின் கேட்டை நோயாளிகள் மூடினர்.
இதுகுறித்து தகவலறிந்த வெள்ளநடை போலீசார் விரைந்து வந்து மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அங்குவந்த மாவட்ட மருத்துவ அதிகாரி வசந்தா மல்லிகா, காலதாமதமாக வந்த ஊழியர்களை கண்டித்தார்.
இதையடுத்து அங்கு கூடியிருந்த நோயாளிகள், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications