அருப்புக்கோட்டை அருகே தலித்கள் மீது தாக்குதல்-50 பேர் காயம்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரணி கிராமத்தில் வெவ்வேறு சமூகத்தினருக்கு இடையே ஜாதிமோதல் ஏற்பட்டதால் அங்கு கடும் பதட்டம் நிலவுகிறது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரணி கிராமத்தில் அருந்ததியர் மக்களின் திருவிழா நடைபெற்றது.
அதில் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வலம் வருவது வழக்கம். அப்படி அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வரும் போது சில ஜாதியினர் தங்களது தெரு வழியே வரக்கூடாது என தடுத்துள்ளனர்.
இதனால் இந்த இரு சமூகத்தினர் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த அருப்புக்கோட்டை கோட்டாட்சியர், திருச்சுழி டிஎஸ்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு இரு தரப்பு மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்பு அருந்ததிய மக்கள் 30 பேர் மட்டும் சாமி கும்பிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டு அம் மக்கள் காவல்துறையினரின் பாதுகாப்போடு சாமி குடும்பிட சென்றனர்.
அப்போது, அங்கு திடீரென 100 க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து, தலித் மக்கள் மீது கற்கள், கம்புகளை கொண்டு கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் தலித் மக்கள் 50 பேர் மற்றும் தங்கபிள்ளை என்ற போலீஸ்காரர் ஆகியோர் படுகாயமடைந்தனர். தாக்குதலின் போது காவல் துறை வாகனம் ஒன்றும் சேதமடைந்தது.
இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட கல்லூரணி ஊராட்சிமன்றத் தலைவர் ராஜமாணிக்கம் உட்பட 18 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications