டிவி நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த மதிமுக கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் டி.வி. நிகழ்ச்சிகள் மூலம் கலாசார சீரழிவு ஏற்படுதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் ம.தி.மு.க. யுறுத்தியது.
தமிழக சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மதிமுக உறுப்பினர் வீர.இளவரசன்,
அரசு பள்ளிகளில் வசதிகள் குறைவாக உள்ளன. உட்காருவதற்கு பெஞ்சுகள் இல்லை. மரத்தடியில் உட்கார்ந்து படிக்கிறார்கள். சுற்றுச்சுவர்கள் சரியாக இல்லை.
இலவச தொலைக்காட்சியை வழங்குவதை மட்டும் அரசு குறிக்கோளாக கொள்ளக்கூடாது. அதில், வரும் நிகழ்ச்சிகளால் கலாசாரம் சீரழியாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் நிவாரண நிதி உடனடியாக கிடைத்துவிடுகிறது. அதுபோல், முதல்வர் நிதியும் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சபாநாயகருடன், சிவபுண்ணியம் மோதல்:
முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் சிவபுண்ணியம் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அவர் எழுந்ததுமே 10
நிமிடம்தான் உங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர்
ஆவுடையப்பன் கூறினார். ஆனால், தனத்து கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என சிவபுண்ணியம் கோரியதை சபாநாயகர் ஏற்கவில்லை.
பின்னர், ''பேச வந்ததே மறந்து போச்சே'' என்றபடி பேசத் தொடங்கினார் சிவபுண்ணியம். 9 நிமிடங்கள் ஆன நிலையில், ''இன்னும் ஒரு நிமிடம்தான் இருக்கு'' என்றார் சபாநாயகர். ''ஒரு நிமிடத்தில் என்ன பேசுவது? அதற்கு பேசாமலேயே உட்கார்ந்துவிடுகிறேன்'' என்று கூறிவிட்டு சிவபுண்ணியம் சட்டென்று உட்கார்ந்துவிட்டார்.
அப்போது சபாநாயகர் ஆவுடையப்பன், நீங்க சீனியர் லீடர்...'' என்று பேச முற்பட்டபோது, அலுவல் ஆய்வுக்குழுக்கூட்டத்தில் பேச ஒதுக்கப்பட்ட ளவுக்கு பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும். அங்கே ஒன்று, இங்கே ஒன்று என இருக்கக்கூடாது. இல்லாவிட்டால் நான் அவையை புறக்கணிப்பேன்'' என்று சிவபுண்ணியம் கோபமாக கூறினார்.
அப்போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு, ஒகேனக்கல் பிரச்சினை பற்றி ஒன்றேகால் மணி நேரம் விவாதம் நடந்தது. அதில் சிவபுண்ணியம் 10 நிமிடம் பேசினார். நேரம் குறைவாக உள்ளது. இதுகடைசி நாள். உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும்'' என்று அமைதிப்படுத்தினார். அதன்பிறகு சிவபுண்ணியத்துக்கு பேச அனுமதி தரப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications