
நாளை நடிகர்கள் உண்ணாவிரதம்-ரஜினி பங்கேற்பு

அதே போல வெளிநாட்டில் உள்ள கமல்ஹாசன் நாடு திரும்பிக் கொண்டுள்ளார். அவர் 12 மணியளவில் இருந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்கிறார்.
நாளை (4ம் தேதி) 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
'ஷார்ப்பா வந்துர்றேன்'...:
இதில் தானும் கலந்து கொள்ளவுள்ளதாக நடிகர் சங்க செயலாளர் ராதாரவியை தொடர்பு கொண்டு ரஜினி தெரிவித்துள்ளார். இது குறித்து ராதாரவி கூறுகையில், என்னுடன் ரஜினி பேசினார். உண்ணாவிரதப் போராட்டம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். நான் எத்தனை மணிக்கு வரணும்னு சொல்லுப்பா... ஷார்ப்பா வந்துர்றேன் என தெரிவித்தார் என்றார்.
அமெரிக்காவில் கமல்:
கமல்ஹாசன் தனது மர்மயோகி படம் சம்பந்தமான வேலைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். உண்ணாவிரத்தில் பங்கேற்க தனது வேலைகளை விட்டுவிட்டு சென்னை விரையும் அவர் நாளை பகல் 12 மணிக்குத் தான் வந்து சேருகிறார்.
விமான நிலையத்தில் இருந்து நேராக அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
10,000 பேர் பங்கேற்பு:
இந்தப் போராட்டத்தில் திரையுலகத்தின் அனைத்து சங்கங்களையும் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதால் சுமார் 10,000 பேர் திரளவுள்ளனர். இதையடுத்து அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகி்ன்றன.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே இந்தப் போராட்டம் நடக்கிறது.