ஜெ. வீடு முன்பு உண்ணாவிரதம்-முதியவர் முயற்சி
சென்னை: அதிமுக பிரமுகர் அபகரித்த நிலத்தை மீட்டுத் தரக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற முதியவரை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தி எச்சரித்து அனுப்பினர்.
ஜெயலலிதாவின் வீடு உள்ள சென்னை போயஸ் தோட்டம் பகுதியில் நேற்று ஒரு முதியவர் பெண்மணி ஒருவருடன் ஆட்டோவில் வந்தார். ஆட்டோவை போலீஸார் தடுத்து நிறுத்தி உள்ளே இருந்த முதியவரிடம் விசாரணை நடத்தினர்.
அவரது பெயர் தாஸ், அவருடன் வந்தவர் முதியவரின் தம்பி மனைவி கிரேசி. தாஸ் திருநின்றவூரைச் சேர்ந்தவர். கடந்த 1995ம் ஆண்டு கோடம்பாக்கத்தில் தாஸ் வசித்து வந்தார். அப்போது தனக்குச் சொந்தமான ரூ. 5 லட்சம் மதிப்புடைய நிலத்தை அதிமுக பிரமுகர் ஒருவர் அபகரித்துக் கொண்டதாக தாஸ் கூறியுள்ளார்.
அந்த நிலத்தை மீட்டுத் தரக் கோரி ஜெயலலிதா வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்க வந்ததாக அந்தப் பெரியவர் தெரிவித்தார்.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீஸாரிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை அழைத்துச் சென்ற போலீஸார், இப்படியெல்லாம் உண்ணாவிரதம் இருக்க முடியாது. போலீஸில் புகார் கொடுத்தால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்தனர்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications