கர்நாடகத்தை கண்டித்து ஓசூரில் 5ம் தேதி பந்த்
ஓசூர்: தமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பினர் பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக நகரங்களில் நடத்தி வரும் வன்முறை போராட்டங்களைக் கண்டித்து ஓசூரில் 5ம் தேதி முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கன்னட அமைப்பினர் கர்நாடகத்தில் நடத்தி வரும் முன்முறைப் போராட்டங்களுக்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் கன்னட இனத்தவர்களும் இதைக் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஓசூரில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அனைவரும் கன்னட அமைப்பினரின் போராட்டத்தை கடுமையாக கண்டித்துப் பேசினர். பின்னர் ஓசூர் நகரில் 5ம் தேதி பந்த் நடத்த அவர்கள் தீர்மானித்தனர்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ மனோகரன், பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்து வரும் கலவரம் கடும் கண்டனத்துக்குரியது.
அங்குள்ள தமிழர்களை கன்னடக்காரர்கள் தாக்குகிறார்கள். அதேபோல, இங்குள்ள கன்னடக்காரர்களை தமிழர்கள் தாக்கினால் என்ன ஆகும் என்பதை தயவு செய்து கன்னடக்காரர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
நானும் கன்னடக்காரன்தான். என்னை தமிழர்கள் அடித்தால் அங்குள்ள கன்னடக்காரர்கள் வந்து காப்பாற்றுவார்களா?. தமிழர்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்பதால்தானே நீங்கள் தாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?
யாராவது நமது வீட்டுக்கு வந்தால் வரவேற்று உபசரித்து முதலில் கொடுப்பது தண்ணீர்தான். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காதவன் மனிதனா? என்று கோபமாக கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications