தமிழகம் முழுவதும் இன்று பகல் சினிமா காட்சிகள் ரத்து
சென்னை: கர்நாடகத்தில் தமிழ்ப் படங்களை திரையிடும் தியேட்டர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்குமானால் கன்னட நடிகர்-நடிகைகள் நடிக்கும் தமிழ் படங்களை திரையிட மாட்டோம் என்று தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. சங்க தலைவர் அண்ணாமலை, செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கர்நாடக மாநிலத்தில் தமிழ் திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்குகளை, அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கி வருவதை, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இனிவரும் காலங்களிலும் இந்த நிலை தொடருமானால், கர்நாடக திரைப்படம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பந்தப்பட்ட திரைப்படங்களை திரையிடுவதற்கு தொழில் ரீதியாக எந்தவித ஒத்துழைப்பும் தரமாட்டோம்.
கர்நாடகாவில் நடைபெறும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை தமிழ்த் திரையுலகம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் காலை மற்றும் பகல் காட்சிகளை ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல சென்னை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்ட திரையரங்குகளில் இன்று காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன
கன்னட அமைப்பினர் பெங்களூரில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் தாக்குதல் நடத்தியதை கடுமையாக கண்டிக்கிறோம்.இந்த விவகாரம் தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சென்னை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஒத்துழைக்கும் என்று கூறியுள்ளார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications