பெங்களூர் ரயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்
சென்னை: தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்லும் ரயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிராக கர்நாடகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதையடுத்து தமிழகத்திலிருந்து மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ், பெங்களூர் செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ், சதாப்தி, பெங்களூர் மெயில் ஆகிய 7 ரயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே போலீஸ் டி.ஐ.ஜி. சிவனாண்டி கூறுகையில்,
கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் செல்லும் அனைத்து ரயில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் ரயில்களில் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒவ்வொரு ரயிலிலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரயில்வே போலீசார் தமிழக எல்லையான ஓசூர் வரை பாதுகாப்புக்கு செல்வர் என்றார்.
ஆனால், ஒசூருக்கு அந்தப் பக்கம் தான் பிரச்சனையே எழுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications