பெங்களூரில் 12 பஸ்கள் உடைப்பு-பஸ் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
ஓசூர்: தமிழகத்திலிருந்து பெங்களூர் சென்ற தமிழக அரசுப் பேருந்துகள் சரமாரியாகத் தாக்கப்பட்டதால், தமிழகத்திலிருந்து பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. ஓசூருடன் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல, கர்நாடகத்திலிருந்தும் பஸ்கள் வரவில்லை. இதனால் இரு மாநில எல்லைப் பகுதியிலும் பஸ் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இந்த வன்முறை அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் மீது திரும்பியது.
ஓசூரிலிருந்து பெங்களூர் சென்ற 12 அரசுப் பேருந்துகள் சந்தாபுரா என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான கன்னட அமைப்பினர் பேருந்துகளை தடுத்து நிறுத்தி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
உள்ளே பயணிகள் இருப்பதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலையே இல்லாமல், கம்புகளாலும், கற்களாலும் பேருந்துகளைத் தாக்கினர். இதில் 12 பேருந்துகளின் கண்ணாடிகளும் உடைந்து சிதறின.
பயணிகள் சிலர் இதில் காயமடைந்தநனர். டிரைவர்கள், கண்டக்டர்களையும் இக்கும்பல் விரட்டி அடித்து தாக்கியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக எல்லையில் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இதற்கு மேல் பேருந்துகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
சந்தாபுரா தாக்குதலுக்கு தமிழகத்தில் பதிலடி கொடுக்கப்படலாம் என்ற அச்சத்தில், கர்நாடகத்திலிருந்து இயக்கப்படும் அம்மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் கர்நாடக எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.
இதனால் இரு மாநிலங்களுக்கும் செல்ல வேண்டிய பயணிகள் எல்லைப் பகுதிகளிலிருந்து நடந்தே கடந்தனர்.
இரு மாநிலங்களிலிருந்தும் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் இரு மாநிலங்களுக்கும் இடையிலான பஸ் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
ஒசூருடன் நிறுத்தம்:
கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட லாரிகள், வேன்கள் ஆகியவை வழக்கம் போல் ஓடிக்கொண்டு இருக்கின்றன.
நேற்று இரவு முழுவதும் பஸ், லாரி, வேன்கள் மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று காலையும் வாகனங்கள் இயக்கப்பட்டன.
இன்று காலை வேலூர், திருவண்ணாமலை மற்றும் சென்னையில் இருந்து வந்த பஸ்கள் ஓசூர் தாண்டி பெங்களூருக்கு சென்றன. ஆனால் சேலம் பஸ்கள் மட்டும் பெங்களூருக்கு இயக்கப்படவில்லை. அந்த பஸ்கள் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications