காஞ்சி கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நேற்று இரவு உண்டியல் உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கச்சபேஸ்வரர் கோயில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோயில் இருந்த சில்வர் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்து குருக்கள், கோயில் ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக இந்த சம்பவம் குறித்து கோயில் நிர்வாகம் காஞ்சி போலீசில் புகார் அளித்தது. இதன்பேரில் காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கோயில் சுற்றுச்சுவரை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
கொள்ளைபோன பொருள்களின் மதிப்பு தெரியவில்லை. அங்கிருந்த மற்றொரு இரும்பு உண்டியலையும் உடைக்க முயற்சி நடந்துள்ளது. ஆனால் அதை உடைக்க முடியாததால் விட்டு சென்றுவிட்டனர்.
சில்வர் உண்டியலில் ஏராளமான நகைகள், ரொக்கம் இருந்திருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications