'மாயண்ணே வந்திருக்காக..வாம்மா மின்னலு'
சென்னை: 'மாயண்ணே வந்திருக்காக.., மாப்பிள்ளை மொக்கச் சாமி வந்திருக்காக.., வாம்மா மின்னலு' சினிமா வசனம் சட்டசபையை கலக்கியது.
சட்டசபையில் விவசாயத்துறை மானியக் கோரிக்கைகள் மீது மாஜி மந்திரியும் அதிமுக எம்எல்ஏவுமான பாண்டுரங்கன் பேசுகையில்,
அதிமுக-திமுக உறுப்பினர்கள் நேருக்கு நேர் வணக்கம் செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் வெளி மாநிலங்களில் நம்மைக் கண்டு அஞ்சுவார்கள் என்றார்.
பின்னர் பட்ஜெட்டில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு எதுகை மோனையுடன் ராகம்போட்டு நீட்டி முழக்கி பேசினார்.
அவரது பேச்சை அனைவரும் சிரித்து ரசித்தனர்.
அப்போது அமைச்சர் பரிதி இளம்வழுதி குறுக்கிட்டு, முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் பேசுவது 'மாயண்ணே வந்திருக்காக.., மாப்பிள்ளை மொக்கச் சாமி வந்திருக்காக.., வாம்மா மின்னலு' என்ற சினிமா வசனம் போல உள்ளது' என்றார்.
இதைக் கேட்டு அவையில் சிரிப்பொலி அதிகமானது.
இதற்கு பதிலளித்த பாண்டுரங்கன், எங்களுக்கும் நக்கலாக பதில் சொல்லத் தெரியும். கருத்துக்கு கருத்தைக் கூறி மோத வேண்டும். அப்படி மோதினால் நாங்கள் ஒருவர் 10 பேரை சமாளிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications