விலைவாசி உயர்வு: 3வது அணி - இடதுசாரிகள் இணைந்து போராட்டம்
ஹைதராபாத்: 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியும், இடதுசாரிகளும் இணைந்து ஏப்ரல் 16ம் தேதி முதல் விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை கூட்டாக நடத்தவுள்ளன.
தேசிய அளவில் முலாயம் சிங், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரின் கட்சிகள் அடங்கிய 3வது அணி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பு உருவானது. இந்தக் கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்களில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் ஒருவர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கூட்டணியிலிருந்து அவராகவே கழன்று கொண்டு விட்டார்.
இந்த நிலையில் 3வது அணியும், இடதுசாரி கூட்டணியும் தற்போது படு வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றன.
தற்போது விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் இரு அணிகளும் தொடர் போராட்டங்களை நடத்தக் களம் குதித்துள்ளன.
இதுகுறித்து 3வது அணியின் ஒருங்கிணைப்பாளரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், விலைவாசி உயர்வைக் கண்டித்து தேசிய அளவில் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்துடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினேன்.
ஏப்ரல் 16ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் இரு அணிகளும் இணைந்து பல்வேறு வகையான தொடர் போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளன.
19ம் தேதி டெல்லியில், கருத்தரங்கம் ஒன்றுக்கும் திட்டமிட்டுள்ளோம். அக்கூட்டத்தில், 300 முதல் 400 சதவீத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதற்கான காரணம் குறித்து விவரிக்கவுள்ளோம். விலைவாசியைக் குறைப்பது எப்படி என்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கவுள்ளோம்.
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், ஆந்திராவில் உள்ள காங்கிரஸ் அரசும், கருப்பு சந்தையை ஒழிக்க தவறி விட்டன. இதனால் ஏழை மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்றார் நாயுடு.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications