நிறத்தை கூறி மனைவியை திட்டினால் குற்றம்-சுப்ரீம்கோர்ட்

மதுரையைச் சேர்ந்தவர் பரூக் பாட்சா. இவர் 1999ம் ஆண்டு பாத்திமா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் தனது மனைவி கருப்பாக இருப்பதைக் கூறி திட்டி வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த பாத்திமா, இரண்டே மாதங்களில் தற்கொலை செய்து கொண்டார்.
மரணமடைவதற்கு முன்பு அவர் கொடுத்த வாக்குமூலத்தில் தனது நிறத்தைக் கூறி கணவர் திட்டியதாக போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து மதுரை செஷன்ஸ் நீதிமன்றம், மனைவியை தற்கொலை செய்யத் தூண்டியதாக கூறி பரூக் பாட்சாவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
இதை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து பரூக் பாட்சா சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அதை நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், பன்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஒரு பெண்ணின் நிறத்தையோ, அழகையோ அவமானப்படுத்தும் வகையில், கருத்துக்கள் தெரிவிப்பது, உடல் ரீதியாக செய்யும் துன்புறுத்தலை விட மோசமானது, கொடுமையானது. பெண்ணுக்கு அது மிகுந்த துன்புறுத்தலைத் தரும்.
குற்றவாளியின் மனைவியை தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு மன ரீதியில் கொடுமைப்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.
இந்தத் தீர்ப்பு தேசிய அளவில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications