நடுக்கடலில் 5 தமிழக மீனவர்கள் கைது- இலங்கை ராணுவம் அடாவடி
ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்படித்துக் கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 5ம் தேதியன்று 600 விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
இந்திய எல்லையோரமாக நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு திடீரென்று வந்த சிங்கள கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்தனர். அந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி பிராங்க்ளின், அந்தோணிராஜ், நாகராஜன், பாலுச்சாமி, குமார் ஆகியோரை துப்பாக்கி முனையில் பிடித்துச் சென்றனர். பின்னர் அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
அவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் சார்பாக 'நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு' தலைவர் அருளானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications