என்ன செய்தாலும் மும்பையில்தான் இருப்பேன்-அமிதாப்
மும்பை: என்னை அடித்தாலும், என் வீட்டைத் தாக்கினாலும், எனது பேனர்களை கிழித்தாலும், நான் மும்பையை விட்டு போக மாட்டேன். இது உறுதி என்று சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
முதலில் ராஜ் தாக்கரே, பிறகு பால் தாக்கரேவின் சாம்னா இதழ் என அடுத்தடுத்து அமிதாப் பச்சனுக்கு சாடல்களும், எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. இதுகுறித்து அமிதாப் பச்சன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மராத்தியில் அளித்த பேட்டியில், நான் மகாராஷ்டிராவுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று யாரும் கூற முடியாது. மராத்தியர்களையும், மகாராஷ்டிரர்களையும், மும்பை மக்களையும் நான் நேசிக்கிறேன் என்று கூறியிருந்தார.
இந்த நிைலயில் நாளிதழ் ஒன்றுக்கு அமிதாப் அளித்துள்ள பேட்டியில், எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் மும்பையை விட்டு வெளியேற மாட்டேன் என்று காட்டமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் மும்பைக்கு அந்நியன் என்று யாராவது சொன்னால் அதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. நான் மும்பையை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன்.
மும்பைதான் எனது வீடு. இங்கிருந்து நான் ஒருபோதும் வெளியேற மாட்டேன். என் வீட்டின் மீது அவர்கள் (ராஜ் தாக்கரே கட்சியினர்) ஆயிரம் பாட்டில்களை எறியட்டும். எனது கொடும்பாவிகளை கொளுத்தட்டும். எனது வீட்டு முன்பு போராட்டங்களை நடத்தட்டும். நான் பயப்பட மாட்டேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் எனக்கு வாழ்வு கொடுத்த மும்பையை விட்டு நான் போக மாட்டேன்.
எனது திரைப்படங்களை திரையிட விடாமல் தடுத்தாலும் சரி, எனது போஸ்டர்களில் தார் பூசி அழித்தாலும் சரி, என் மீது கற்களை வீசியும், கம்புகளால் தாக்கினாலும் சரி, அல்லது இன்னும் என்னவெல்லாம் ஆயுதங்கள் இருக்கிறதோ, அத்தனையைக் கொண்டு என்னைத் தாக்கினாலும் சரி நான் மும்பையை விட்டுப் போக மாட்டேன்.
என் மீது பொய் வழக்குகள் போடட்டும். என்னை எப்படி வேண்டுமானாலும் அசிங்கப்படுத்தட்டும். நான் அவர்களுக்குப் பணிய மாட்டேன்.
என்னை யாரும் மும்பையை விட்டு வெளியேற வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. இந்த நகரில் வசிக்க விசா எதுவும் தேவையில்லை. இது எனது நிலம். எனக்கு மட்டுமல்ல இந்தியக் குடிமகன் யாராக இருந்தாலும் அவனுக்கு சொந்தமானது இந்த நிலம்.
1968ம் ஆண்டு நான் வேலை தேடி இங்கு வந்தேன். 40 ஆண்டுகளாக இந்த நகரை எனது வீடாக மாற்றிக் கொண்டுள்ளேன். எனது முதல் காரை இங்குதான் வாங்கினேன். எனது மனைவியை நான் இங்குதான் சந்தித்தேன். எனது இரு குழந்தைகளும் இங்குதான் பிறந்தனர். எனது தாயும், தந்தையும் தங்களது கடைசிக்காலத்தை இங்குதான் கழித்தனர். அவர்களை இங்குதான் நான் தகனம் செய்தேன். அவர்களது அஸ்தியை இந்த மண்ணில்தான் நான் கரைத்தேன்.
எனக்குப் பெயரும், புகழும் கொடுத்தது இந்த மண்தான் என்று உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
ரஜினியுடன் ஒப்பிட்டு உங்களை சாம்னா இதழில் எழுதியுள்ளனரே என்ற கேள்விக்கு அதற்காக பெருமைப்படுகிறேன். ரஜினி எனது நண்பர். அவரைப் போன்ற நண்பர் கிடைத்ததற்காக சந்தோஷப்படுகிறேன். அவருடன் என்னை ஒப்பிட்டிருப்பதைக் கெளரவமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications