கிரண்பேடியும் 'நோ' - ராகுல் வருவாரா?
புதுடில்லி: ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி மறுத்துவிட்டார். இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்குகிறது. இதற்கு திபெத்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏதென்ஸ் நகரில் புறப்பட்டதில் இருந்து ஒலிம்பிக் சுடர் ஓட்டத்துக்கு திபெத்தியர்கள் இடையூறு செய்துவருகின்றனர்.
இந்நிலையில் லண்டன், பிரான்ஸ், அமெரிக்காவை கடந்து வரும் ஒலிம்பிக் சுடர் வரும் 17ம் தேதியன்று தலைநகர் டெல்லியை அடைகிறது.
நாட்டின் பல்வேறு சாதனையாளர்கள் இந்த சுடரை தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்கின்றனர். அப்போது திபெத்தியர்களால் பிரச்னை வராமல் தடுக்க சுடருக்குப் பாதுகாப்பாக தேசிய பாதுகாப்பு கமாண்டோக்களை உடன் செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில் சுடரை முதலில் ஏந்திச் செல்வதாக அறிவிக்கப்பட்ட இந்திய கால்பந்து அணி கேப்டன் பூட்டியா, திபெத்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொடர்ஓட்டத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்.
இதனால், அவருக்கு பதிலாக சச்சின் முன்னின்று ஏந்தி செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது. அவருடன் ஒலிம்பிக் வீரர் மில்கா சிங், அஞ்சு ஜார்ஜ், கிரண் பேடி ஆகியோரும் பங்கேற்பதாக கூறப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்று கிரண் பேடி அறிவித்துள்ளார்.
அதிகமான பாதுகாப்பு கெடுபிடிகளால் விளையாட்டின் முக்கியத்துவம் பறிபோகிறது. அதீத பாதுகாப்பு ஒலிம்பிக் ஓட்டத்தை மூச்சு திணற செய்வதாக இருக்கும் என்பதால் இந்த ஓட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்தேன் என்று பேடி காரணம் கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் முரளி தியோரா, ஜோதிர்ஆதித்யா சிந்தியா ஆகியோருக்கு இந்திய ஒலிம்பிக் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் ராகுல் காந்தி இதில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications