வன்னியில் கடும் மருந்து தட்டுப்பாடு-தமிழர்கள் கண்ணீர்
கிளிநொச்சி: இலங்கையின் வன்னி பகுதியில் அத்தியாவசிய மருந்துகள், எரிபொருள் தட்டுப்பாட்டினால் போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் தமிழர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் விவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி பகுதியில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவுவதால் அங்கு வாழும் தமிழர்களுக்கு மருத்துவ சேவையை வழங்க முடியாத நிலையில் இருப்பதாக பிராந்திய சுகாதாரத்துறை பொறுப்பாளர்கள் புகார் கூறியுள்ளனர்.
இலங்கை ராணுவ அமைச்சக உத்தரவுப்படி, வன்னிப் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட மருந்துப் பொருட்களை வவுனியா மற்றும் ஓமந்தை சோதனைச் சாவடியிலேயே சிங்களப் படையினர் தடுத்து நிறுத்திவிட்டனர்.
2008 மார்ச் வரையிலான காலத்துக்கு கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட மருந்துகள் இன்னும் வந்து சேரவில்லை. ஜனவரி மாதத் தொடக்கத்திலேயே வந்து சேர்ந்திருக்க வேண்டிய மருந்துகள் இப்போது ஏப்ரல் மாதமாகியும் வந்து சேரவில்லை.
இலங்கை ராணுவ அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காமல் வவுனியாவில் இந்த மருந்துகள் தேங்கிக் கிடக்கின்றன.
குழந்தைகளுக்கான சாதாரண நோய் எதிர்ப்பு மருந்தான 'அமாக்சில் சிரப்' பாட்டில்கள், நீரிழிவு மருந்துகள்கூட கையிருப்பில் இல்லை. இதனால் நோயாளிகள் மிக மோசமான நிலையில் உள்ளனர்.
போர் நிறுத்தத்தின்போது முல்லைத்தீவு சுகாதாரத்துறைக்கு இலங்கை அரசு தடையில்லாமல் ஒதுக்கிய எரிபொருளின் அளவு இப்போது கணிசமாகக் குறைந்துவிட்டது.
முல்லைத் தீவு பகுதிக்கு தினமும் 14,000 லிட்டர் எரிபொருள் தேவைப்படுகிறது. இந்த எரிபொருளை வைத்துதான் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை, 2 துணை மருத்துவமனைகள் மற்றும் 6 மருந்துக்கிடங்குகளின் மின்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளும் அடங்கும்.
எனவே அவசர சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு நோயாளிகளைக் கொண்டு செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
நெருக்கடியான இந்த சூழலில் முல்லைத் தீவு தேவைக்காக அன்றாடம் 2,750 லிட்டர் எரிபொருளை மட்டுமே இலங்கை அரசு வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசின் கண்மூடித்தனத்தினால் வன்னிப் பகுதியில் தமிழர்கள் படும் அவஸ்தைகளை பல தடவை முறையிட்டும் பலனில்லை. ஐநா சபை மனித உரி்மை அமைப்புகளுக்கு இந்த அவலங்கள் எல்லாம் தெரியவில்லையா? குறிப்பாக குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ வசதியை அளிக்கும் பொறுப்பை அவை எப்படி நிறைவேற்றப்போகின்றன?
சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு சட்டப்படி எந்தவொரு நாடும் குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ உதவியை அளிக்கத் தவறக்கூடாது என்ற விதி இலங்கையில் மீறப்படுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கை என்ற போர்வையில் குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைக்கூட இலங்கை அரசு மறுத்துவருகிறது. இந்த கொடூரமான மனித உரிமைகள் மறுப்பை சர்வதேச அமைப்புகள் கண்டு கொள்ளாமல் இருப்பது வருத்தம் தருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications