திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் போலி தங்க காணிக்கைகள்
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத் தாலி, தங்க மூக்குத்தி, தங்க வேல், வெள்ளிப் பாதங்கள் போன்றவை போலியானவை என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலியான நகைகளை விற்ற கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு நேர்ந்து கொள்பவர்கள், அங்குள்ள உண்டியலில் தங்கத் தாலி, வேல், மூக்குத்தி, வெள்ளிப் பாதம் உள்ளிட்டவற்றை காணிக்கையாகப் போடுவது வழக்கம்.
இவற்றை பெரும்பாலும் கோவிலுக்கு அருகில் உள்ள நகைக் கடைகளில் வாங்கி கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்துவார்கள்.
நேற்று கோவில் உண்டியலில் சேர்ந்த காணிக்கைப் பொருட்கள் எடுத்து எண்ணப்பட்டன. அப்போது அதில் போடப்பட்டிருந்த தங்கத் தாலி, வேல், மூக்குத்தி, வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவை போலியானவை, கவரிங் என்று தெரிய வந்தது.
கோவிலுக்கு அருகில் நகைக் கடை வைத்திருப்போர், அப்பாவி பக்தர்களை தங்கம், வெள்ளி என்று கூறி போலியான நகைகளை தலையில் கட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் நகைக் கடை அதிபர்கள் சங்கத்தில் புகார் தரப்பட்டுள்ளது. போலீஸாரும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி நகைகளை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications