நெல்லையிலும் ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு - பலர் ஓட்டம்!
நெல்லை: தூத்துக்குடியின் பிரபல தாதாக்கள் ஜெயக்குமாரும், கவிக்குமாரும் சென்னையில் என்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், நெல்லையில் ரவுடிகளின் பட்டியைல போலீஸார் தூசு தட்டி எடுத்து வருகின்றனர். இதனால் என்கெளன்டருக்குப் பயந்து பல ரவுடிகள் தலைமறைவாகி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டி வருவதை அடுத்து ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரித்து அவர்களின் செயல்பாடுகளை போலீசார் கண்காணிக்க தொடங்கினர்.
ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, கூலிப்படையாக செயல்படுபவர்கள், போதை பொருட்கள் மற்றும் அத்தியவாசிய பொருட்களை கடத்துபவர்கள் போன்றவற்றில் ஈடுபடுவோரை சுட்டு பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்திலும் போலீசார் ரவுடிகளின் பட்டியலை தயாரித்து வருகின்றனர். நெல்லையில் பிடிபட்ட கன்னியாகுமரியை சேர்ந்த பிரபல ரவுடி செந்திலும் கூலிப்படையாக செயல்பட்டு 10க்கும் மேற்பட்ட கொலைகளை செய்துள்ளார். மாவட்டத்தில் நடந்த கொலைகளிலும் கூலிப்படையினரின் பங்கு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
பணத்துக்காக கொலை செய்யும் கூலிபடையை சேர்ந்த ரவுடிகள் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் புதிய குற்றவாளியாக இருப்பதால் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
சிலர் பழைய குற்றவாளிகளுடன் கூட்டணி அமைத்து கொண்டு தங்களது பகுதியை விட்டு வேறு பகுதிக்கு சென்று குற்றச் செயல்களின் ஈடுபடுகின்றனர். இவ்வாறு பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படையினரை தனியாக அடையாளம் காண டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து கூலிப்படையினர் பட்டியலை போலீசார் ரகசியமாக தயாரித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து தாங்கள் என்கெளன்டர் மூலம் போட்டுத் தள்ளப்படுவோமோ என்று பயந்து பல பிரபல ரவுடிகள் பதுங்க ஆரம்பித்துள்ளனர். பலர் மாவட்டத்தை விட்டே இடம் பெயர்ந்து வேறு இடங்ளுக்கு ஓடி வருகின்றனராம்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications