சர்ச்சை பயிற்சியாளர் சுட்டுக் கொலை

ஒரிஸ்ஸாச் சேர்ந்த 6 வயது சிறுவன் புதியா சிங். கடந்த 2006ம் ஆண்டு புதியா சிங், பூரியிலிருந்து புவனேஸ்வர் வரையிலான 65 கிலோமீட்டர் தூரத்தை தொடர்ந்து ஓடி கடந்து சாதனை படைத்து நாட்டையே அதிசயத்தில் ஆழ்த்தினான்.
அவனுக்குள் இருந்த திறமையை வெளிக் கொணர்ந்தவர்தான் பிராஞ்சி தாஸ். புதியாவால் அதிக தூரம் ஓடி சாதனை படைக்க முடியும் என்றும் அறிவித்தார் பிராஞ்சி. ஆனால் அதன் பின்னர்தான் சர்ச்சைகள் வெடித்தன.
பல தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள், சிறார் நல அமைப்புகள், புதியா சிங்கை வைத்து பணம் பார்க்க முயற்சிக்கிறார் பிராஞ்சி சிங், சிறுவனின் உடல் நலத்தைக் கெடுக்கும் செயல் இது என்று எதிர்ப்பு குரல் எழுப்பினர்.
இந்த நிலையில் புதியா சிங்கின் தாயாரும் தனது மகனை பிராஞ்சி தாஸ் பயிற்சி என்ற பெயரில் கொடுமைப்படுத்துவதாக புகார் கூறினார். இதையடுத்து பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார் பிராஞ்சி தாஸ்.
இந்த நிலையில் நேற்று மாலை பிராஞ்சி தாஸ் அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
புவனேஸ்வரில் உள்ள பிஜேபி கல்லூரி பகுதியில் தனது நண்பர்களோடு பிராஞ்சி தாஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அங்குள்ள ஜூடோ மையத்தில் அவர் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வந்தனர். வந்தவுடன் பிராஞ்சி தாஸை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பி விட்டனர்.
சம்பவ இடத்திலேயே பிராஞ்சி தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கழுத்து, மார்பு, கால்களில் குண்டுகள் பாய்ந்துள்ளன.
இந்த சம்பவம் ஒரிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications