3 விபத்துகள்- 6 அய்யப்ப பக்தர்கள் உள்பட 15 பேர் பலி
நெல்லை: கேரளாவில் எரிமேலி பகுதியில் நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 6 அய்யப்ப பக்தர்கள் பலியானார்கள்.
ெநல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சித்திரை விஷுவை முன்னிட்டு சபரிமலை கோவிலுக்கு மாலை போட்டனர். பின்னர் பேருந்தில் சபரிமலை சென்றனர்.
சபரிமலையில் தரிசனத்தை முடித்துக் கொண்டு அனைவரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் சென்ற பேருந்து கோட்டயம் மாவட்டம் எரிமேலி அருகே உள்ள கனமலை என்ற இடத்தில் மழைப் பாதையில் போய்க் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தாறுமாறாக ஓடி பள்ளத்தில் விழுந்தது.
இதில் பேருந்தின் ஓட்டுநர் சுப்ரமணியம் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 47 பேர் படுகாயமடைந்தனர்.
கதிரடிக்கும் இயந்திரம் கவிழ்ந்து 4 பெண்கள் பலி:
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கதிரடிக்கும் இயந்திரம் கவிழ்ந்து விழுந்ததில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கந்தசாமி என்பவர் தனக்குச் சொந்தமான கதிரடிக்கும் இயந்திரத்ைத அருகில் உள்ள கிராமத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தார். அங்கு கதிரடிக்கும் வேலை முடிந்தவுடன் கூலியாட்களோடு அவர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென இயந்திரம் கவிழ்ந்து விழுந்தது. இதில் நான்கு கூலிப் பெண்கள் சிக்கி நசுங்கினர். நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த நிலையில் 6 பேர் மீட்கப்பட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் விபத்தில் 5 பேர் பலி:
அதே போல அரியலூர் அருகே நேற்றிரவு நடந்த இன்னொரு விபத்தில் 5 பேர் பலியாயினர். 55 பேர் காயமடைந்தனர்.
அரியலூர் அருகே லாரியும் பஸ்சும் மோதிக் கொண்டதி்ல் 3 பெண்கள் உள்பட 5 பேர் பலியாயினர். இந்த பஸ் திருப்பூரிலிருந்து ஜெயங்கொண்டம் சென்று கொண்டிருந்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications