இட ஒதுக்கீட்டில்கிரீமி லேயர்' கூடாது-சிபிஐ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுபான்மையினர் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

அக் கட்சியின் அகில இந்திய செயலாளர் டி.ராஜா எம்.பி இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம். இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வியில் மக்கள் பின்தங்க சாதியும் ஒரு காரணம் என்பதை உச்ச நீதிமன்றம் ஒத்துக் கொண்டுள்ளது. நாட்டில் சமத்துவம் தழைக்க அரசியல் ஜனநாயகம் மட்டும் போதாது. பொருளாதார ஜனநாயக மும், சமூக நீதி ஜனநாயகமும் வேண்டும்.

வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர்' முறையை பயன்படுத்துகிறார்கள். கல்வி நிலையங்களில் எக் காரணத்தை கொண்டும் கிரீமி லேயர்' இடம் பெறக் கூடாது.

சிறுபான்மை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+