'அக்னி' சோதனையால் ஆமைகள் பீதி: முட்டையிட மறுப்பு!
புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநில கடற்கரைப் பகுதியில், நடத்தப்பட்டு வரும் அக்னி ஏவுகணை சோதனையால், ஆமைகள் பீதியடைந்து முட்டையிட மறுத்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒரிஸ்ஸா மாநிலம் கஹிர்மாதா என்ற கடற்கரைப் பகுதி ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்குப் பெயர் போனதாகும். இப்பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் ஆமைகள் கூட்டமாக கூடி முட்டைகள் இடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை ஆமைகள் முட்டையிடவில்லை.
இப்பகுதியில் நடத்தப்பட்ட அக்னி ஏவுகணை சோதனையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் 23ம் தேதி வீலர் தீவில் அக்னி-1 சோதனை நடந்தது. இதனால் ஏற்பட்ட பெரும் சப்தத்தால் ஆமைகள் பீதியடைந்திருக்கலாம். எனவேதான் முட்டையிட மறுப்பதாக ஒரிஸ்ஸா மாநில வன விலங்குகள் பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந் நிலையில் ஏப்ரல் 27ம் தேதி இன்னொரு அக்னி ஏவுகணை சோதனை நடத்த டிஆர்டிஓ திட்டமிட்டுள்ளது. இதனால் வன விலங்குத் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
அடுத்த சோதனையை ஒத்திவைக்கும்படி டிஆர்டிஓவுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாக மாநில தலைமை வனவிலங்குகள் காப்பாளர் பி.கே. பட்நாயக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கஹிர்மாதா பகுதியில், பெருமளவில் ஆமைகள் கூடி முட்டையிட்டன. ஆனால் இந்த ஆண்டு இதுவரை 500 ஆமைகள் மட்டுமே முட்டையிட கூடியுள்ளன. ஆனால் இதுவரை முட்டை எதுவும் இடவில்லை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications