விலைவாசி: எதிர்க்கட்சியினர் அமளி - லோக்சபா ஒத்திவைப்பு
டெல்லி: விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது கட்ட தொடர், 25 நாள் இடைவெளிக்குப் பின்னர் இன்று காலை தொடங்கியது. லோக்சபா கூடியதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியினர், இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற எதிர்க்கட்சி எம்.பிக்கள் விலைவாசி உயர்வுப் பிரச்சினை குறித்து பிரச்சினை கிளப்பினர்.
அனைத்து உறுப்பினர்களும் தங்களது இருக்கைகளிலிருந்து எழுந்து சபாநாயகர் இருக்கை முன்பு கூடி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து முதலில் 11.30 மணி வரை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அவையை ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் சபை கூடியபோதும் மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நடவடிக்கைகள் இன்று முழுமைக்கும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இடதுசாரிகள் ஊர்வலம்:
முன்னதாக நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை இடதுசாரி கட்சிகள் நடத்தின. இதில் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட எம்.பிக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அரசை எதிர்த்து கோஷமிட்டபடி ஊர்வலம் நடத்தினர்.
விலைவாசியைக் குறைக்க அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications